- Author
- ஜெயமோகன்
- Meeting date
- April 26, 2026
- Archive year
- 2026
- Rating
- 5/5
நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம். கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம். அல்லது ஏதோ தொல்பொருள் போல சுரண்டிச் சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும்.
சங்க இலக்கியங்களை வாசிப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒருமுறையில் வாசித்து முடித்துவிடக்கூடியதுமல்ல. வாசிப்பில், மீள்வாசிப்பில் விரித்தெடுத்துக்கொள்ள ஏராளமான உவமைகள் உள்ளன.
இவற்றுக்கான உத்திகள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு வழிமுறை, கருத்துகள் இருக்கும். அது பற்றி குழுவில் உரையாடினோம்.
நாம் சங்க இலக்கியத்தை பள்ளிப்பாடமாக மனப்பாடம் செய்கிறோம். கோயில் சிலைகளைப் போல இருட்டில் வைத்து வழிபடுகிறோம். அல்லது ஏதோ தொல்பொருள் போல சுரண்டிச் சுரண்டி ஆய்வு செய்கிறோம். கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது. வாழ்வை விரிவுபடுத்துவது. வாழ்வை வைத்துத் தான் கவிதையை வாசிக்க வேண்டும். அப்படியொரு வாசிப்புக்கான இடத்தை இத்தொடர் சங்க இலக்கியங்களுக்கு அளிக்கிறது என்று பலர் குறிப்பிட்டார்கள். ஆகவே, இதைத் தமிழில் எழுத முடிவெடுத்தேன்.