- Author
- ஜெயகாந்தன்
- Meeting date
- March 28, 2026
- Archive year
- 2026
- Rating
- 2.5/5
‘பகலில் ஒரு வேஷம்’ - பாட்டனைப் போன்ற வயது வித்தியாசமுள்ள ஒரு கிழவனோடு ஒரு பருவப்பெண் காம உறவு கொண்டு மகிழ்ந்தும், பெருமையோடும் வாழ்ந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். ஏனோ அந்த வயதில் எனக்கு அவள் மீதும் அந்தக் கிழவன் மீதும் அர்த்தமற்றதொரு வெறுப்பு ஏற்பட்டது.
பிற்காலத்தில் சார்லி சாப்ளின், ராகுல் சாங்கிருத்யாயன், யூஜின் ஓநீல், ஆர்தர் மில்லர் போன்ற பல அறிஞர்களின் வாழ்க்கையைக் கண்டபோது, நமது சமூகத்தில் இது ஏன் வெறுக்கத்தக்கதாகவும், விபரீதமாகவும் ஆகிவிடுகிறது என்று யோசித்தபோது, அது இவர்களின் வயது வித்தியாசத்தினால் எற்படுவது அல்ல, கிழவர்களானாலும் சரி, பருவப் பெண்களானாலும் சரி நமது சமூகத்தில் வாழ்க்கை பற்றிய அவர்களுக்குள்ள வக்கரித்த கண்ணோட்டத்தினால்தான் இத்தகைய உறவுகள் இங்கே விபரீதமாகிவிடுகின்றன என்று தோன்றியது.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகிற அனுபவங்கள் எவ்வளவு மோசமானதாயினும் அவற்றை உலக வெளிச்சத்தில் பார்க்கிற பொழுதுதான், அதில் உண்மையில் பொதிந்துள்ள மானுடத் தன்மைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்குத் தெரிந்த அந்த நிகழ்ச்சியை, சம்பந்தப்பட்ட அந்த மனிதர்களை நான் வெறுப்பதனால் படைப்பு உருவாகாது. அவர்களையும் விரும்பி நேசித்து அவர்களுக்கும் நியாயம் வழங்குகிற பொழுதுதான் நான் படைப்பாளியாகி விடுகிறேன். - ஜெயகாந்தன், நூலின் முன்னுரைலிருந்து
ஒன்று உடைவதாயினும், உருகுவதாயினும், ஆவியாகப் பறந்து போவது ஆயினும் அந்தத் தகர் நிலைக்கு, உருகு நிலைக்கு, கொதி நிலைக்கு வருவதற்குக் காலம் என்கிற கணக்கு ஒன்று உண்டே...