Skip to content
Tamil Book Club

Journal entry

பசித்தவனின் தேடல்கள்

வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள் புத்தக வாசிப்பின் போது எழுதியது.

பசித்தவனின் தேடல்கள் cover artwork
From the journal
Author
Prakash
Published
February 28, 2026
Updated
Original version
Tags
தேடல்கள்

இசை, இசைக்கருவிகள் எனக்கு நெருக்கமானதொரு உலகம். அதனாலேயே மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் பல கருவிகள் பற்றியும் அவற்றின் தற்போதைய நிலை பற்றியும் விவரிக்கிறது. பல இசை கருவிகளின் பெயர் கூட தெரியாதவனாக இருந்தேன். அல்ல, தெரிந்த இசை கருவிகளின் எண்ணிக்கை மிக மிக குறைவே எனலாம். அந்த வகையில் இந்த புத்தகம் எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.

புத்தகத்தின் நிறையென நான் எண்ணும் சில கருத்துகள்:

  • பல கருவிகளின் தொகுப்பு

  • அவற்றின் வடிவம் பற்றிய குறிப்புகள்

  • அவற்றின் வரலாறு

  • அவற்றை பயன்படுத்தும் இன்றைய கலைஞர்கள் பற்றிய குறிப்புகள்.

  • இந்த நூலின் தொடக்க வரி :)

ஆர்வமுடன் வாசிக்க தொடங்கினாலும், வாசிப்பின் இறுதியில் ஒரு விதமான பற்றாக்குறை உணர்வே மிஞ்சியது.

ஒரு விதத்தில் இந்த புத்தகம் மேலோட்டமான தொகுப்பாகவே இருந்தது. ஆங்காங்கே சில மேற்கொள்கள், பெயர்கள் குறிப்பிடப்படிருந்தாலும் ஆதார நூல்கள், கட்டுரைகள் பற்றி முழு விவரம் இல்லை. இசைகருவிகளின் வகைகள் பற்றி கட்டமைப்பாக இல்லாமல் முன்னும் பின்னுமாய் சில செய்திகள் இருப்பதால் தெளிவை உருவாக்கவில்லை.

இருந்த போதிலும் இந்த புத்தகம் வாசித்த பின் மேற்கொண்டு தேடியதில் கண்டடைந்த சில புத்தகங்கள் இவை.

புத்தகங்கள்

சில சுவாரஸ்யாமான வலைப்பதிவுகள் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டி இருந்தன.

வலைப்பதிவுகள்

இசைக்கருகளுக்கென புத்தகம் எழுதுகையில் ஒரு பெரிய சவால் அதன் வடிவம் பற்றி வார்த்தைகளில் விவரிப்பது. ஆனால் இப்போதைய தொழில்நுட்பம், குறிப்பாக இணையத்தில் கிடைக்கும் படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்த சவாலை எளிதாக்குகிறது.

காணொளிகள்

குறிப்பு

பசி என்றும் நிரந்தரமாய் தீர்வதில்லை. எனவே தேடல் தொடரும், பகிர்வதும் தொடரும்!